ெஜனீவா: கொவிட்-19 கிருமிக்கு எதிரான மொடர்னா நிறுவனத்தின் 10.3 மில்லியன் தடுப்பூசிகளை சுவிட்சர்லாந்து அழிக்கவுள்ளது. அந்தத் தடுப்பூசிகள் சென்ற வாரம் காலாவதியானதால் இவ்வாறு செய்யவேண்டியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
சென்ற வாரம் புதன்கிழமையன்று தடுப்பூசிகள் காலாவதியானதாக அமைச்சு கூறியதென சுவிட்சர்லாந்தின் 'கீஸ்டோன்-ஏடிஎஸ்' ஊடகம் தெரிவித்தது.
அழிக்கப்படவிருக்கும் தடுப்பூசிகளில் 2.5 மில்லியன் தடுப்பூசிகள் அந்நாட்டின் ராணுவத் தளவாடத் தளம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதர 7.8 மில்லியன் தடுப்பூசிகள் பெல்ஜியத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு 'கீஸ்டோன்-ஏடிஎஸ்' ஊடகத்திடம் தெரியப்படுத்தியது.
அழிக்கப்படவிருக்கும் தடுப்பூசிகளின் மதிப்பு சுமார் 280 மில்லியன் சுவிட்சர்லாந்து ஃபிராங்க்ஸ் (400 மில்லியன் வெள்ளி) என்று சுவிட்சர்லாந்து செய்தி நிறுவனமான 'பியோபாக்டர்' முன்னதாகக் கணித்திருந்தது. அந்தத் தகவலை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
முன்னதாகவே தடுப்பூசிகளை வாங்கி கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலைக் கையாள்வது சுவிட்சர்லாந்தின் அணுகுமுறையாக இருந்தது. அதனால் இந்நிலை உருவானதென சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
ஒருவேளை சில தடுப்பூசிகள் எதிர்பார்த்த பலனளிக்காமல் இருந்தாலோ விநியோகத்தில் இடையூறுகள் நேர்ந்தாலோ பிரச்சினைகள் எழுவதைத் தவிர்க்க சுவிட்சர்லாந்து பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வாங்கியது. சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் சுமார் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெர்மனியில் இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் சுமார் மூன்று மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்நாட்டின் சுகாதார அமைச்சு ஏப்ரல் மாதம் இதைச் சொன்னது,

