விண்ட்சோர் (பிரிட்டன்): பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் அரசியாரின் உடல் இருக்கும் சவப்பெட்டி புதைக்கப்பட்ட இடத்தில் அவரின் மறைவைக் குறிக்கும் கல்லறை செதுக்கப்பட்டுள்ளது. அரசியார் மாண்டபோது அவரின் வயதும் 1926லிருந்து 2022ஆம் ஆண்டுவரை அவர் ஆண்டதும் கல்லறையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இரண்டாம் எலிசபெத் அரசியார் தமது 96ஆம் வயதில் காலமானார். இம்மாதம் 19ஆம் தேதியன்று அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.