அரிய இளஞ்சிவப்பு வைரம்: விலை $50 மி.

அரிய இளஞ்சிவப்பு வைரம்: விலை $50 மி.

1 mins read
fc8ee85f-0441-4e3e-a04c-bccad6aa34f2
படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

ஓர் அரிய இளஞ்சிவப்பு நிற வைரம் 35 மில்லியன் டாலருக்கு ஏலம் விடுப்படவுள்ளது.

இந்த வைரத்தின் எடை சுமார் 18 காரட். உலகின் ஆகப் பெரிய பேரிக்காய் வடிவம் கொண்ட இளஞ்சிவப்பு வைரம் இது எனக் கருதப்படுகிறது.

இந்த வைரம் ஏற்கெனவே ஒரு மோதிரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு வைரத்தின் இருபுறமும் வெள்ளை நிற வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மோதிரத்தின் மொத்த எடை 18.18 காரட்.

1818 எனும் எண் அதிர்ஷ்டம் என ஆசியாவில் கருதப்படுகிறது. இதனால் இதை வாங்குபவரின் கதவை அதிர்ஷ்ட தேவதை தட்டும் என நம்பப்படுகிறது.