நோரு சூறாவளியில் குறைந்தது அறுவர் மரணம்

2 mins read
4e66090b-c7b1-4d1a-9ec5-0e7da4bd3408
பிலிப்பீன்சின்சான் மிகுவெல் நகரில் வெள்ளத்தில் நடக்கும் மக்கள். படம்: இபிஏ -

புலாக்­கான் (பிலிப்­பீன்ஸ்): நொரு சூறா­வ­ளி­யால் வட பிலிப்­பீன்­சின் பல மாநி­லங்­களில் மோச­மான வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது.

சூறா­வ­ளி­யில் ஐந்து அவ­சர சேவைப் பணி­யா­ளர்­கள் உட்­பட குறைந்­தது அறு­வர் மாண்­ட­னர். சான் மிகு­வெல் நக­ரில் அவ­சர சேவைப் பணி­யா­ளர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

நோரு சூற­வாளி முத­லில் தாக்­கிய பொலில்லோ தீவில் உள்ள பர்­டி­யோஸ் நக­ரில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. அங்கு முதி­ய­வர் ஒரு­வர் மாண்­ட­தாக அப்­ப­கு­தி­யின் பேரி­டர் செயல்­பாட்டு அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

பிலிப்­பீன்ஸ் அதி­பர் ஃபெர்டி­னெண்ட் மார்க்­கோஸ் ஜூனி­யர் நில­வ­ரத்தை நேற்று ஹெலி­காப்­டரி­லி­ருந்து பார்­வை­யிட்­டார். வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கா­னோ­ருக்கு உதவ அதி­கா­ரி­கள் சிர­மப்­பட்டு வரு­கின்­ற­னர்.

லூஸோன் தீவில் பல விவ­சாய நிலங்­கள் உள்­ளிட்ட பகு­தி­கள் வெள்­ளத்­தில் மூழ்­கின. தலை­ந­கர் மணி­லா­வில் பங்­குச் சந்தை, அர­சாங்க அலு­வ­ல­கங்­கள், பள்­ளி­கள் ஆகி­யவை நேற்று மூடப்­பட்­டன.

நோரு சூறா­வளி அடுத்­த­தாக இந்த வாரம் வியட்­னா­மைத் தாக்­கும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது. சூறா­வ­ளி­யால் அந்­நாட்­டில் காப்பி தயா­ரிக்­கப்­படும் 'சென்ட்­ரல் ஹைலண்ட்ஸ்' பகு­தி­யில் கடும் மழை பொழி­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வியட்­னாம், உல­கின் இரண்­டா­வது ஆகப் பெரிய காப்பி உற்­பத்தி நாடு. பொது­வாக அக்­டோ­பர் மாதம் முதல் மறு ஆண்டு ஜன­வரி மாதம் வரை அங்கு காப்­பிக் கொட்­டை­களுக்­கான அறு­வ­டைக் காலம்.

சூறா­வளி, காப்­பிக் கொட்டை அறு­வ­டை­யைப் பாதிக்­கக்­கூ­டும். அத­னால் உல­க­ள­வில் காப்பி ஏற்று­ம­தி­யில் இடை­யூ­று­கள் நேர­லாம் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

நோரு, இந்த வட்­டா­ரத்­தில் கடந்த 20 ஆண்­டு­களில் காணாத ஆக மோச­மான சூறா­வளி. அது தாக்­க­வி­ருப்­பதை முன்­னிட்டு மத்­திய வியட்­னா­மில் பலர் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­ற­னர்.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­கள் வீடு­களை வலுப்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.