ஹாங்காங்: பயணிகளை ஹோட்டலில் தனிமைப்படுத்தும் உத்தரவு ஹாங்காங்கில் நேற்று முதல் விலக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அதிகமான பயணிகளை வரவேற்க அந்நகரம் ஆயத்தமாகி வருகிறது.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்போவதாக ஹாங்காங் சென்ற வாரம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து பயணம் தொடர்பிலான கோரிக்கைகள் 10 மடங்கானதாக பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, கொள்ளைநோய்ப் பரவலின் தற்போதைய கட்டத்தில் எல்லா பயணக் கட்டுப்பாடுகளையும் விலக்கமுடியாது என்று ஹாங்காங் சுகாதார அமைச்சர் லோ சுங்-மாவ் கூறியுள்ளார். தற்போது அப்படி செய்வது அபாயகரமானது என்று அவர் குறிப்பிட்டார்.

