பாரிஸ்: உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கணிக்கப்பட்டதைவிட உலகப் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து வருவதாக 'ஓஇசிடி' எனும் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. எரிசக்தி, பணவீக்கம் தொடர்பில் நெருக்கடி மோசமடைவதால் இந்நிலை உருவெடுத்துள்ளதாக அமைப்பு எச்சரித்துள்ளது.
முன்னதாக கணிக்கப்பட்டது போலவே இவ்வாண்டு உலகப் பொருளியல் மூன்று விழுக்காடு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் முன்பு கணிக்கப்பட்டதைவிட 0.6 விழுக்காடு குறைவாகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஐரோப்பாவில் பொருளியல் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

