ரஷ்யப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஏழு சிறுவர்கள் மரணம்

மாஸ்கோ: ரஷ்­யா­வில் சுவஸ்­திக்கா சின்­னத்­தைக் கொண்ட சட்­டையை அணிந்­தி­ருந்த ஆட­வர் ஒரு­வர் பள்ளி ஒன்­றில் ஏழு பிள்­ளை­கள் உட்­பட குறைந்­தது 13 பேரைச் சுட்­டுக் கொன்­றார். தாக்­கு­த­லில் 21 பேர் காய­ம­டைந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.

காய­ம­டைந்­தோ­ரில் 14 சிறு­வர்­களும் அடங்­கு­வர்.

தாக்­கு­தல்­கா­ரர் பின்­னர் தன்­னைத் தானே சுட்­டுக்­கொண்­ட­தா­க­வும் விசா­ரணை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இச்­சம்­ப­வம் தலை­ந­கர் மாஸ்­கோ­விற்கு சுமார் 970 கிலோ­மீட்­ட­ருக்கு அப்­பால் நிகழ்ந்­தது. தாக்குதல்காரரின் அடை­யா­ள­மும் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தற்­கான கார­ண­மும் தெரி­ய­வில்லை.

தாக்­கு­தலை ‘மனி­தா­பி­மா­ன­மற்ற பயங்­க­ர­வாதச் செயல்’ என்று ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் வகைப்­ப­டுத்­தி­னார். காய­ம­டைந்­தோர் விரை­வில் குண­ம­டைய அதி­பர் தமது வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­ட­தாக கிரெம்­ளின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!