நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் $648 மி. சேர்க்கப்பட்டது

நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் $648 மி. சேர்க்கப்பட்டது

1 mins read
5b9eb7cd-7822-4286-8e52-bedc811a4077
முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

கோலாலம்பூர்: முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2013ஆம் ஆண்டு 2.08 பில்லியன் ரிங்கிட் (648 மில்லியன் வெள்ளி) சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.

1எம்டிபி வழக்கு விசாரணையின்போது இந்த விவரம் திங்கட்கிழமையன்று (26 செப்டம்பர்) உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்ட்ட காலத்தில் பல்வேறு பரிவர்த்தனைகளின் மூலம் அந்தத் தொகை திரு நஜிப்பின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாக 'ஏம்பேங்க்' வங்கியின் ஜாலான் ராஜா கிளையின் நிர்வாகியான திருவாட்டி உமா தேவி கூறினார்.

ஊழலில் ஈடுபட்டதற்காக திரு நஜிப் தற்போது 12 ஆண்டு சிறைத் தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.