ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தின் எம்மன் நகரில் உள்ள ஒரு பண்ணையில் இருக்கும் சுமார் 201,000 கோழிகள் கொல்லப்படவுள்ளன.
அவற்றுக்கிடையே வெகு விரைவில் பரவக்கூடிய பறவைக் காய்ச்சல் கிருமி வகை கண்டறியப்பட்டுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.
நெதர்லாந்தில் செப்டம்பர் மாதம் மிகவும் மோசமான பறவைக் காய்ச்சல் கிருமி வகையால் பாதிக்கப்பட்ட 12 பறவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்தில் அங்கு பல பறவைகள் இதற்கு உள்ளானது தெரியவந்தது.


