'ஈரான் ஆர்ப்பாட்டங்களில் 76 பேர் கொல்லப்பட்டனர்'

பாரிஸ்: ஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 76 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நார்வேயில் இயங்கும் 'ஐஹெச்ஆர்' எனும் ஈரான் மனித உரிமை அரசாங்க சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

"ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் நிறுத்த திட்டவட்டமாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று 'ஐஹெச்ஆர்' இயக்குநர் மஹ்மூட் அமீரி-மொகாதம் கூறினார்.

ஆர்ப்பாட்டங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் பதிவான காணொளிகளும் மாண்டோரின் சான்றிதழ்களும் தன்னிடம் இருப்பதாக அவர் சொன்னார்.

அவற்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கியால் சுடப்படுவது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் 14 மாநிலங்களில் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக 'ஐஹெச்ஆர்' கூறியது.

தலைநகர் டெஹ்ரானில் குறைந்தது மூவர் மாண்டனர்.

மஹ்சா அமினி எனும் பெண் சர்ச்சைக்குரிய சூழலில் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

'ஹிஜாப்' எனும் தலையங்கியை சரியாக அணியாததாகச் சொல்லப்பட்டதாால் அந்த 22 வயது குர்தியப் பெண் ஈரானின் நன்னடத்தை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தடுப்புப் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அவர் மாண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!