கோத்தபாயவின் மனைவியிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுபவர் கைது

கோத்தபாயவின் மனைவியிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுபவர் கைது

1 mins read

கொழும்பு: முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேயின் மனைவியை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருமதி அயோமா ராஜபக்சேயிடமிருந்து ஒரு மில்லியன் இலங்கை ரூபாயைப் பறிக்க முயன்றதாகக் கருதப்படும் 28 ஆடவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

சந்தேக நபர் கொலன்னாவ நகரைச் சேர்ந்தவர்.

செப்டம்பர் மாதம் 22, 23 தேதிகளில் அவர் திருமதி அயோமா ராஜபக்சேயின் கைபேசி எண்ணுக்கு மொத்தம் 27 முறை அழைத்ததாக விசாரணையில் தெரியவந்தது.

சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.