கடல்வழி கால்நடைகளை ஏற்றுமதி செய்ய நியூசிலாந்து தடை

கடல்வழி கால்நடைகளை ஏற்றுமதி செய்ய நியூசிலாந்து தடை

1 mins read
7f8b67b1-3281-496b-8cc4-5e2e121dbf24
படம்: ராய்ட்டர்ஸ் -

கால்நடைகளை கடல்வழி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை அடுத்த ஆண்டிலிருந்து நியூசிலாந்து தடை செய்யவுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரலில் தடை நடப்புக்கு வரும். விலங்குகளின் நலனை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

2020ல் 6.000 மாடுகளை ஏற்றிசென்ற கப்பல் ஒன்று ஜப்பானுக்கு அருகே கடலில் கவிழ்ந்தது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இந்த தடை கொண்டுவரப்பட்டுள்ளது.

உயர்தரமான உணவை பாதுகாப்பான, முறையான வழி தயாரிக்கும் நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. இந்த தடை இதற்கு சான்றாக அமையும் என்று அந்நாட்டின் விவசாயத் துறை அமைச்சர் கூறினார்.

ஆகாய வழி கால்நடைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை தொடர்ந்து அனுமதிக்கப்படும்.