ஏர்ஏஷியாவின் சில விமானச் சேவைகளில் முகக்கவசம் அணியத் தேவையில்லை

ஏர்ஏஷியாவின் சில விமானச் சேவைகளில் முகக்கவசம் அணியத் தேவையில்லை

1 mins read
78565f79-88a4-4c49-b9b6-6e8e546d7672
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

ஏர்ஏசியா விமான நிறுவனம், தனது விமானங்களில் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அறிவித்திருக்கிறது.ஆனால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ள இடங்களுக்கு இத்தளர்வு பொருந்தாது.

அவ்விடங்களுக்குச் செல்லும்போது விமானப் பயணிகள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும்.

விமானங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை என்று மலேசியா புதன்கிழமை அகற்றியது.

இதை அடுத்து, ஏர்ஏஷியா நிறுவனம் தனது உள்நாட்டு விமானச் சேவைகளிலும் மற்ற சில விமானச் சேவைகளிலும் முகக்கவசங்கள் இனி கட்டாயமில்லை என்று வியாழன் அன்று தெரிவித்தது.

இருப்பினும், விரும்பியவர்கள் ஏர்ஏஷியா விமானங்களில் முகக்கவசம் அணியலாம் என்று நிறுவனம் கூறியது.