மாஸ்கோ: உக்ரேனில் உள்ள நான்கு பகுதிகளை ரஷ்யா இன்று அதிகாரபூர்வமாகத் தன்வசப்படுத்தும் என்று கிரம்ளின் தெரிவித்துள்ளது. இதன் தொடர்பில் அப்பகுதிகளில் இம்மாதம் வாக்கெடுப்பு நடந்ததைத் தொடர்ந்து இந்தநடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் மூலம் கிழக்கு, தென் உக்ரேனில் உள்ள அதிக இடங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படும். அதற்கான ஆவணங்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கையெழுத்திடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான சடங்கு இன்று நடைபெறவுள்ளது.
இதற்கிடையே கூடுதல் படைகளைத் திரட்ட ராணுவ அனுபவம் உள்ள பொதுமக்களை உக்ரேன் போரில் ஈடுபடுத்தப்போவதாக திரு புட்டின் அறிவித்ததைத் தொடர்ந்து குறைந்தது 200,000 ரஷ்யர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

