ஃபுளோரிடா மாநிலத்தில் 'இயன்' சூறாவளி

ஃபுளோரிடா மாநிலத்தில் 'இயன்' சூறாவளி

1 mins read
33f87430-2b1c-4cca-a533-06f5667feb9b
'இயன்' சூறாவளி தாக்கியபோது பாதுகாப்புக்காக ஓடிய ஒருவர். படம்: ஏஎஃப்பி -

சரா­சோட்டா (அமெ­ரிக்கா): 'இயன்' சூற­ாவளி அமெ­ரிக்­கா­வின் காயோ கோஸ்டா பகு­தி­யைத் தாக்­கி­யுள்ளது. 'இயன்', நான்­காம் நிலை 'ஹரிக்­கேன்' சூறா­வ­ளி­யாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சில இடங்­களில் மணிக்கு 140 மைல் வேகத்­துக்­கும் மேல் காற்று வீசி­யது. ஃபுளோரி­டா­வின் ஒர்­லாண்டோ நக­ருக்கு அருகே உள்ள பிர­பல 'டிஸ்னி வேர்ல்ட்' கேளிக்கை வளா­கத்தை நோக்கி 'இயன்' சென்று­கொண்­டி­ருந்­த­தா­க­வும் கூறப்­பட்டது.

கடந்த சில கால­மாக 'ஹரிக்­கேன்' சூறா­வ­ளிகளின் சீற்­றம் மோச­ம­டைந்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.