நேப்பிடாவ்: முன்னாள் மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு மேலும் மூவாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருவாட்டி சூச்சி ஏற்கெனவே 20 ஆண்டு சிறைத் தண்டனையை நிறைவேற்றி வருகிறார். தேர்தலில் ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டது, ஊழல், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் கட்டுப்பாடுகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர அவ்வாறு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியர் ஷோன் டர்னெல் எனும் பொருளியல் நிபுணருக்கும் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக மூவாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் மக்கள் ஆட்சி இருந்தபோது அவர் அரசாங்க பொருளியல் ஆலோசகராகப் பணியாற்றினார்.