தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மன்னர் சார்ல்ஸ் உருவம் கொண்ட நாணயம்

1 mins read
56889476-5a1a-466b-b254-3fd879320b85
படம்: எஏஃப்பி -

மன்னர் சார்ல்சின் முக உருவம் பொறிக்கப்பட்ட புதிய பிரிட்டிஷ் நாணயம் அறிமுகமாகியுள்ளது. மன்னரின் உருவம் 50 பென்ஸ் நாணயங்களில் வெளியிடப்படும். அதோடு, மன்னரின் உருவம் கொண்டுள்ள சிறப்பு 5 பவுண்ட் நாணயமும் வெளியிடப்படும்.

மன்னரின் உருவத்துக்குக் கீழ் லத்தீன் மொழியில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

50 பென்ஸ் நாணயம், மன்னர் இடப்புறம் பார்த்தபடி உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் தாயார் மறைந்த எலிசபெத் அரசியாரின் உருவம் வலப்புறம் பார்த்தபடி இருக்கும். 1660ல் பிரிட்டிஷ் அரசாட்சி மீட்டமைக்கப்பட்டதிலிருந்து இது ஒரு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எலிசபெத் ராணியார் செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார். அவர் முகம் பொறிக்கப்பட்ட சுமார் 27 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும்.