உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 23 பேர் பலி

உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 23 பேர் பலி

1 mins read
0aaa4934-e33d-442b-a8e8-aa11a092cd8f
-
Google News Preferred Icon

உக்ரேனின் ஜபோரிஜியா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் 23 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரேன் தெரிவித்தது.

இது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதையும், சாலையில் உடல்கள் கிடப்பதையும் அந்த படங்களில் காண முடிகிறது. இதுதொடர்பாக ரஷ்யா தரப்பில் உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.