தாய்லாந்து பிரதமராகத் தொடரவுள்ளார் பிரயுத்

பேங்காக்: தாய்லாந்தின் பிரதமராகப் பதவிவகிக்க திரு பிரயுத் சான் ஓ சாவின் தவணைக்காலம் நிறைவடையவில்லை என்று அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. அதையடுத்து திரு பிரயுத் தொடர்ந்து பிரதமராகப் பதவி வகிக்கவுள்ளார்.

தாய்லாந்தில் ராணுவ ஆட்சி வந்த பிறகுதான் தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்தது. அதனால் திரு பிரயுத் எட்டு ஆண்டு தவணைக் காலத்தைத் தாண்டி ஆட்சி புரிந்ததாகாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியன்று திரு பிரயுத் பிரதமர் பதவியிலிருந்து தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவர் பதவி விலகவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. 

கடந்த ஒரு மாதமாக துணைப் பிரதமர் பிராவிட் வோங்சுவான் தற்காலிகமாகப் பிரதமர் பதவியை வகித்து வந்தார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!