தாய்லாந்து அரசு விளக்கம்

தாய்லாந்து அரசு விளக்கம்

2 mins read
f0da6f84-d11f-43e8-a27f-67255a525cc3
தாய்லாந்தில் தாங்கள் விற்கும் உணவில் கஞ்சா இல்லாததை விளக்கும் ஒரு கடை. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பேங்­காக்: போதைப்­பொ­ருள் தடை செய்­யப்­பட்­டி­ருக்­கும் சிங்­கப்­பூர் உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்­தோ­ரி­டையே கஞ்சா பயன்­பாட்டை விளம்­ப­ரம் செய்யும் எண்­ணம் இல்லை என்று தாய்­லாந்­தின் பொது சுகா­தார அமைச்­சர் அனுட்­டின் சார்ன்­வி­ராக்­குல் கூறி­யுள்­ளார்.

"அவர்­க­ளின் மனப்­பான்­மையை மாற்­று­வது எங்­கள் நோக்கமல்ல," என்று அவர் குறிப்­பிட்­டார். தாய்­லாந்­தின் துணைப் பிர­த­ம­ரு­மான திரு அனுட்­டின், அந்­நாட்­டில் கஞ்சா தொடர்­பி­லான சட்­டம் வரை­யப்­பட்­ட­தில் முன்­னணி வகித்தவர்.

மருத்­துவ ரீதி­யா­க­வும் பொரு­ளி­யல் ரீதி­யா­க­வும் கஞ்­சா­வைப் பயன்­ப­டுத்த வகை­செய்­யு­மாறு 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­த­லின்­போது திரு அனுட்­டி­னின் கட்சி, இயக்­கம் ஒன்றை நடத்­தி­யது. தாய்­லாந்­தில் கடந்த ஜூன் மாதம் ஒன்­ப­தாம் தேதி­யன்று தடை­செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருள் பட்­டி­ய­லி­லி­ருந்து கஞ்சா விலக்­கப்­பட்­டது.

"இதை சாதித்­ததை எண்ணி நான் பெரு­மைப்­ப­டு­கி­றேன்," திரு அனுட்­டின் கூறி­னார்.

கஞ்­சா­வின் தவ­றான அம்­சங்­களைக் கட்­டுப்­ப­டுத்த முடிந்­தால் அத­னால் தாய்­லாந்து மக்­களும் பல­ன­டை­வர், சம்­பந்­தப்­பட்ட எல்லா துறை­க­ளுக்கு வரு­வா­யும் கிட்­டும் என்று திரு அனுட்டின் சொன்­னார்.

தாய்­லாந்­தில் கஞ்சா தடைசெய்­யப்­பட்ட போதைப்­பொ­ருள் பட்­டி­ய­லி­லி­ருந்து விலக்­கப்­பட்­டது பிற நாடுகளின் அரசாங்கங்கள் உட்பட சில தரப்­பி­ன­ரி­டையே அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யது.

இதற்­கி­டையே, இதன் தொடர்பில் தாய்லாந்தின் அணு­கு­மு­றை­யைப் பற்­றித் தெரிந்­து­கொள்ள மலே­சிய அர­சாங்­கம் ஆர்­வம் காண்­பித்­துள்­ளது. அதன் கஞ்சா சட்­டம் குறித்து மேலும் அறிந்­து­கொள்ள மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தாய்லாந்துக்குப் பய­ணம் மேற்­கொண்­டார்.

'கஞ்சா தடை உள்ள நாடுகளைச் சேர்ந்தோரிடம் விளம்பரம் செய்ய எண்ணம் இல்லை'