முதல் இந்தோனீசிய கொவிட்-19 தடுப்பூசி

ஜகார்த்தா: முதன்­மு­றை­யாக இந்­தோனீ­சி­யா­வில் உரு­வாக்­கப்­பட்டுள்ள கொவிட்-19 தடுப்­பூ­சிக்கு அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் பொதுச் சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இது, மருந்­து­க­ளைப் பெற யாரையும் சார்ந்­தி­ருக்­கத் தேவை­யில்­லாத நிலையை இந்­தோ­னீ­சியா அடைந்­துள்­ள­தைக் குறிப்­ப­தாக அமைப்பு கூறி­யது.

கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்தே உள்­ளூ­ரில் தடுப்­பூ­சி­க­ளைத் தயா­ரிப்­பதன் முக்­கி­யத்­து­வத்தை ஜகார்த்தா வலி­யு­றுத்தி வந்­தது. எனி­னும், சீனா­வின் சினோ­வேக், மேற்­கத்­திய நாடு­களில் உரு­வான மொடர்னா, ஃபைசர் தடுப்­பூ­சி­களையே இந்­தோ­னீ­சியா தற்­போது சார்ந்­தி­ருக்­கிறது.

இந்­தோ­னீ­சி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள இந்தோ­வேக் தடுப்­பூசியை அந்­நாட்டு அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான 'பயோ ஃபார்மா' மருந்து நிறு­வ­ன­மும் அமெ­ரிக்­கா­வின் டெக்­சஸ் மாநி­லத்­தைச் சேர்ந்த 'பெய்­லர்' மருத்­து­வக் கல்­லூ­ரி­யும் இணைந்து தயா­ரித்­துள்ளன.

இந்­தோ­னீ­சி­யா­வில் முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ரும் இந்தோவேக் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம். பூஸ்­டர் எனும் கூடு­தல் தடுப்­பூ­சி­யாக இந்தோவேக்கைப் பயன்­படுத்­து­வ­தற்­கான மருத்­துவ ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!