தாய்லாந்து பிரதமராகத் தொடரவுள்ளார் பிரயுத்

தாய்லாந்து பிரதமராகத் தொடரவுள்ளார் பிரயுத்

1 mins read
b8a94848-f3a0-4639-9abc-9bff54c6a90e
-

பேங்­காக்: தாய்­லாந்­தின் பிர­த­ம­ரா­கப் பதவிவகிக்க திரு பிரயுத் சான் ஓ சாவின் தவ­ணைக்­கா­லம் நிறை­வ­டை­ய­வில்லை என்று அந்­நாட்­டின் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­றம் ஒன்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது. அதையடுத்து திரு பிரயுத் தொடர்ந்து பிர­த­ம­ரா­கப் பதவி வகிக்­க­வுள்­ளார்.

தாய்­லாந்­தில் ராணுவ ஆட்சி வந்த பிறகுதான் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் நடப்­புக்கு வந்­தது. அத­னால் திரு பிரயுத் எட்டு ஆண்டு தவ­ணைக் காலத்­தைத் தாண்டி ஆட்சி புரிந்­த­தா­காது என்று நீதி­மன்­றம் குறிப்பிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி­யன்று திரு பிர­யுத் பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மா­கப் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­டார். நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளிக்­கும் வரை அவர் பதவி வில­க­வேண்­டும் என்று முடிவெ­டுக்­கப்­பட்­டது.

கடந்த ஒரு மாத­மாக துணைப் பிர­த­மர் பிரா­விட் வோங்­சு­வான் தற்­கா­லி­க­மா­கப் பிர­த­மர் பத­வியை வகித்து வந்­தார்.