கம்போடிய படகு விபத்து: வியட்னாமில் ஏழு சடலங்கள்

1 mins read
4d4a06d3-d26b-494c-bef5-99acbeaca6c6
-

ஹனோய்: கம்­போ­டி­யா­வில் படகு விபத்து நிகழ்ந்து சுமார் ஒரு வாரத்­திற்­குப் பிறகு ஏழு பேரின் உடல்­கள் வியட்­னா­மில் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. தென் வியட்­னா­மில் உள்ள கடற்­க­ரைக்கு உடல்­கள் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

வியட்­னா­மின் ஃபு குவோக் தீவின் கடற்­கரை ஒன்­றில் அந்த ஏழு உடல்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்டன. அவை மூழ்­கிய பட­கு­டன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளின் உடல்­கள் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தாக அந்­நாட்­டின் பொதுப் பாது­காப்பு அமைச்சு கூறி­யது.

கம்­போ­டி­யா­வின் கடற்­கரை நக­ரான சிஹா­னுக்­வில்­லில் விபத்து நேர்ந்­தது. பட­கில் 40க்கும் அதி­க­மா­னோர் இருந்­த­னர். கம்­போ­டியா, வியட்­னாம் இரு நாடு­க­ளை­யும் சேர்ந்த அதி­கா­ரி­கள் 30 பேரை உயி­ரு­டன் மீட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

விபத்­துக்­குப் பிறகு ஆள் கடத்­தல் வழக்கு தொட­ரப்­பட்­டது; அறு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர்.