காபூலில் தற்கொலைத் தாக்குதல்; 19 பேர் மரணம்

காபூலில் தற்கொலைத் தாக்குதல்; 19 பேர் மரணம்

1 mins read
b96a7774-89c0-4a60-bf7a-778640019e66
துணைப்பாட நிலையத்தில் நேர்ந்த தாக்குதலில் காயமடைந்த ஒருவர். படம்: ஏஎஃப்பி -

காபூல்: ஆப்­கா­னிஸ்­தான் தலை­ந­கர் காபூ­லில் துணைப்­பாட நிலை­யம் ஒன்­றில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொ­லைத் தாக்­கு­த­லில் குறைந்­தது 19 பேர் கொல்­லப்­பட்­ட­னர், பலர் காய­முற்­ற­னர். தாக்­கு­த­லுக்கு இது­வரை யாரும் பொறுப்­பேற்­க­வில்லை.

துணைப்­பாட நிலை­யத்­தில் தேர்வு நடந்­து­கொண்­டி­ருந்­த­போது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. இதில் 27 பேர் காய­ம­டைந்­த­தாக காபூல் காவல்­துறை பேச்­சா­ளர் ஒரு­வர் குறிப்­பிட்­டார். மாண்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் எனக் கூறப்­பட்­டது.

மாண்­டோர் எண்­ணிக்கை 33 என தலி­பான் தரப்பு சொன்­னது. மாண்­டோ­ரில் பல பெண் மாண­வர்­களும் அடங்­கு­வர் எனச் சொல்­லப்­பட்­டது.