‘இயன்’ சூறாவளியால் ஃபுளோரிடாவில் குறைந்தது 10 பேர் மரணம்

ஃபோர்ட் மையர்ஸ் (அமெ­ரிக்கா): அமெ­ரிக்­கா­வின் ஃபுளோரிடா மாநிலத்தை 'இயன்' சூறா­வளி தாக்­கி­ய­தில் குறைந்­தது 10 பேர் மாண்­டு­விட்­ட­னர். உயிரிழந்தோரின் எண்­ணிக்கை மேலும் அதி­க­மாக இருக்­கும் என்று அதி­கா­ரி­கள் அஞ்­சு­கின்­ற­னர்.

இம்­மா­நி­லத்­தில் சூறா­வளி தாக்­கிய பிறகு சுமார் 2.2 மில்­லி­யன் வீடு­களில் இன்­ன­மும் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்டுள்ளது. மோச­மான வெள்­ளத்­தால் சிலர் தங்­க­ளின் வீடு­களில் சிக்­கி­யி­ருக்க நேரிட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

'இயன்' சூறா­வளி, ஃபுளோரி­டா­வின் வர­லாற்­றில் ஆக மோச­மா­ன­தாக இருக்­கும் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் எச்­ச­ரித்­துள்­ளார்.

கணி­ச­மான எண்­ணிக்­கை­யில் மர­ணங்­கள் பதி­வா­கக்­கூ­டும் என்­றும் அவர் கூறி­னார்.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி 'இயன்' சூறா­வளி வட, தென் கெரலைனா மாநி­லங்­களை நோக்கி நகர்வதாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஃபுளோரி­டாவை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது 'இயன்' வலுவிழந்து சாதாரணப் புயல் காற்றாக மாறியது. அனால், நேற்று முன்­தி­னம் தென்கெரலைனாவை நோக்­கிச் செல்­லும்­போது அது மீண்­டும் வலு­வ­டைந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!