உக்ரேனுக்கு $17.6பில்லியன் மதிப்பிலான உதவி

அமெரிக்கா உக்ரேனுக்குத் தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கும்: ஜோ பைடன்

 வாஷிங்டன்:உக்ரேனுக்கு $17.6 பில்லியன்(12.3 மி. அமெரிக்க டாலர்கள்) மதிப்பிலான உதவியை அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  உக்ரேனுக்குத் தொடர்ந்து அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கும் என கூறியுள்ளார்.

செய்தியாளர்களின் சத்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

"ர‌‌‌ஷ்ய அதிபர் புட்டினின் பொறுப்பற்ற வார்த்தைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அஞ்சப்போவதில்லை. புட்டினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். 

"அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அதிலிருந்து தப்பிக்க முடியாது. உக்ரேனுக்கு நாங்கள் தொடர்ந்து ராணுவ தளவாடங்களை வழங்குவோம். நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக உள்ளது. 

"எனவே திரு புட்டின், நான் சொல்வதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நான் எங்கள் நட்பு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இன்றும் புதிய தடைகளை அறிவிக்கிறோம்," என பைடன் கூறியுள்ளார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!