வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட சிங்டெல் நிறுவனத்தின் 'ஒப்டஸ்'

1 mins read
08ec8508-521e-4252-ac56-71baff34f114
ஆஸ்திரேலியாவின் 'ஒப்டஸ்' தொலைத்தொடர்பு நிறுவனம். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் இரண்டாவது ஆகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான 'ஒப்டஸ்' இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

அதற்கு 10 நாள்களுக்குப் பிறகு 'ஒப்டஸ்' முக்கிய நாளிதழ்களில் முழு பக்க மன்னிப்பை கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனத்துக்குச் சொந்தமான 'ஒப்டஸ்' பாதிக்கப்பட்டோருக்கு உதவும் ஓர் இணையத்தளத்துக்கும் வாடிக்கையாளர்களை வழியனுப்பியது.

"இது மிகவும் மோசமான ஒரு நிகழ்வு என்பதையும் உங்களின் நம்பிக்கையை மீண்டும் பெற அதிக முயற்சி எடுக்கவேண்டும் என்பதையும் நாங்கள் அறிவோம்," என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது.