சிங்டெல்லின் ஆப்டஸ் நிறுவனத்தின் மீது ஆஸ்திரேலிய அரசாங்கம் பாய்ச்சல்

மெல்­பர்ன்: இணை­யப் பாது­காப்பு விதி­மு­றை­களை மீறி­ய­தற்­காக சிங்­டெல்­லின் ஆப்­டஸ் நிறு­வ­னத்­தின் மீது ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் தனது கோபத்­தைக் காட்­டி­யி­ருக்­கிறது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் செயல்­படும் ஆப்­டஸ் நிறு­வ­னம் அந்­நாட்­டின் ஆகப்­பெ­ரிய இரண்­டா­வது தொலைத் தொடர்பு நிறு­வ­ன­மா­கும்.

அந்த நிறு­வ­னத்­தின் இணை­யப் பாது­காப்பு விதி­மீ­றல்­கள் கார­ண­மாக நாட்­டின் பத்து மில்­லி­யன் பேர், அதா­வது 40 விழுக்­காடு மக்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து சிங்­டெல்­லுக்­குச் சொந்­த­மான ஆப்­டஸ் நிறு­வ­னத்தை ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் கடு­மை­யா­கச் சாடி­யி­ருக்­கிறது.

நாட்­டில் இது­வரை இல்­லாத இணை­யப் பாது­காப்பு மீற­லில் 10,200 வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தனிப்­பட்ட விவ­ரங்­கள் கசிந்­துள்­ளன. அவர்­க­ளுக்கு விரை­வில் தக­வல் தெரி­விக்­கு­மாறு அர­சாங்­கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

"பொது­வாக இது­போன்ற விவ­கா­ரங்­களில் அர­சாங்­கம் தலை­யி­டாது. ஆனால் ஆப்­டஸ் அத­னைச் செய்ய வைத்­து­விட்­டது," என்று உள்­துறை அமைச்­சர் கிளாரா ஓநி­யல் தெரி­வித்­தார்.

மெல்­பர்­னி­லி­ருந்து ஒளி­யேற்­றப்­பட்ட தொலைக்­காட்சி செய்தி நிகழ்ச்­சி­யில் பேசிய அவர், நிதி நெருக்­கடி குற்­றச்­செ­யல்­க­ளில் ­இருந்து தங்­க­ளைப் பாது­காத்­துக் கொள்ள ஆஸ்­தி­ரே­லி­யர்­களும் முன் னெச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது அவ­சி­யம்," என்­றார்.

இதற்­கி­டையே இணை­யத் தாக்குத­லில் பாதிக்­கப்­பட்ட எந்த வாடிக்­கை­யா­ளர்­கள் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­பதை நிர்­ண­யிக்க மத்­திய, மாநில அர­சு­க­ளு­டன் இணைந்து செயல் ­ப­டு­வ­தாக நேற்று ஆப்­டஸ் கூறி­யது. வாடிக்­கை­யா­ளர்­களுக்கு ஏற் படும் பாதிப்பை குறைப்­ப­தற்­காக அர­சாங்­கம் மற்­றும் அதி­கா­ரி­க­ளு­டன் தொடர்ந்து ஆக்­க­க­ர­மாக செயல்­பட்டு வரு­கி­றோம் என்று மின் அஞ்­சல் வழி­யாக ஆப்­டஸ் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!