அமெரிக்காவில் குழந்தை உள்ளிட்ட 4 இந்திய வம்சாவளியினர் கடத்தல்

அமெரிக்காவில் குழந்தை உள்ளிட்ட 4 இந்திய வம்சாவளியினர் கடத்தல்

1 mins read
b29fa71e-e650-4043-9629-a15f066ba923
கடத்தப்பட்டவர்களின் புகைப்படங்கள் (படம்: இந்திய ஊடகம்) -

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஐந்து இந்திய வம்சாவளியினர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டு மாதக் குழந்தையும் அடங்கும். கடத்தல்காரர்கள் ஆயுதங்கள் ஏந்தியிருப்பதாகவும் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் காவல் துறை தெரிவித்தது.

36 வயது ஜஸ்தீப் சிங், அவரது மனைவி 27 வயது ஜஸ்லீன் கவுர், அவர்களின் எட்டு மாதக் குழந்தை அரூஹி தேரி மற்றும் 39 வயது அமன்தீப் சிங் ஆகியோர் கடத்தப்பட்டதாக காவல் துறை கூறியது.

பல உணவகங்கள், கடைகள் உள்ள நெடுஞ்சாலையில் கடத்தல் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது. கடத்தப்பட்டவர்கள் வலுக்கட்டாயமாகக் கொண்டுசெல்லப்பட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறினர்.

கடத்தலுக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். சந்தேக நபரையோ கடத்தப்பட்டவரையோ பார்த்தால் காவல் துறைக்கு அழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுகொள்ளப்பட்டனர்.