கோக்சஸ் பஸார் (பங்ளாதேஷ்): ரொஹிங்யா அகதிகள் இருந்த படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது மூவர் மாண்டனர், சுமார் 20 பேரைக் காணவில்லை. நேற்று பங்ளாதேஷுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பருவநிலை மோசமாக இருந்ததால் படகு மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடற்கரை நகரான ஹல்புனியாவில் குறைந்தது மூவரின் உடல்கள் கரைக்குத் தள்ளப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.
மாண்ட மூவரும் 18லிருந்து 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் என்று காவல்துறை தெரிவித்தது.