அமெரிக்காவில் கடத்தப்பட்ட நான்கு இந்தியர்கள் மரணம்

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னியா மாநி­லத்­தில் கடந்த திங்­கட்­கி­ழமை கடத்­தப்­பட்ட இந்­தியா வம்­சா­வ­ளிக் குடும்­பத்­தைச் சேர்ந்த நால்­வர் மாண்­டு­

கி­டக்­கக் காணப்­பட்­ட­னர்.

கடத்­தப்­பட்­ட­தற்கு இரண்டு நாள் கழித்து புதன்­கி­ழமை இவர்­கள் மாண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. "நாங்­கள் பயந்­த­து­போ­லவே நடந்து­ விட்­டது," என்று கலிஃபோர்னியா மாநி­லத்­தின் மெர்­சட் நகர காவல் துறை அதிகாரி செர்­னன் வார்ன்கே புதன் இரவு குறிப்­பிட்­டார்.

மாண்­ட­வர்­கள் ஜஸ்­தீப் சிங், 36, அவ­ரின் மனைவி ஜஸ்­லீன் கோர், 27, இந்­தத் தம்­ப­தி­ய­ரின் எட்டு மாத பெண் குழந்தை அரூஹி தேரி, இவர்­க­ளின் உற­வி­னர் அமன்­தீப் சிங், 39, ஆகி­யோர் என காவல்துறை உறு­திப்­ப­டுத்­தி­யது.

இந்­தக் குடும்­பம் மெர்­சட் நக­ரில் வாகன வர்த்­த­கம் நடத்தி வந்­தது. வர்த்­த­கக் கட்­ட­டத்­தின் வெளியே பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்­புப் படக்­க­ரு­வி­யில் இவர்­கள் நால்­வ­ரும் கடத்­தப்­ப­டு­வது பதி­வாகி இருந்­த­தாக காவல் துறை அலு­வ­ல­கம் குறிப்­பிட்­டது.

ஆயு­தந்­தாங்­கிய மர்ம ஆட­வர் ஒரு­வர் இந்த நால்­வ­ரை­யும் பல­வந்­த­மாக வாக­னம் ஒன்­றில் ஏற்­றி­ய­தும் இவர்­களில் இரு­வ­ரின் கைகள் பின்­பு­ற­மா­கக் கட்­டப்­பட்­டி­ருந்­த­தும் அந்­தப் பதி­வில் இடம்­பெற்­றி­ருந்­தது.

இச்­சம்­ப­வம் தொடர்­பாக ஜீசஸ் மேனு­வல் சல்­காடோ, 48, என்

­ப­வரி­டம் காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

மெர்­செட் நக­ரின் வட­மேற்கே 8 மைல் தூரத்­தில் இருக்­கும் அட்­வாட்­டர் என்­னும் பகு­தி­யில் உள்ள ஒரு வீட்­டில் தற்­கொலை செய்­து­ கொள்ள முயன்­ற­போது இந்த ஆட­வர் பிடி­பட்­டார். உயி­ரி­ழந்­தோ­ரில் ஒரு­வ­ரின் ஏடி­எம் அட்டை அட்­வாட்­டர் பகு­தி­யில் பயன்­ப­டுத்­தப்­பட்­டதை துப்­ப­றி­யும் அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­த­னர்.

"அதி­கா­ரி­கள் தொடர்­பு­கொள்­ளும் முன்­னரே அந்த ஆட­வர் தற்­கொ­லைக்கு முயன்­றார். அத­னைத் தொடர்ந்து மருத்­து­வ­

ம­னை­யில் மயக்­க­நி­லை­யில் காணப்­பட்­டார்," என்று ஷெரிஃப் வார்ன்கே கூறி­னார்.

இவ­ருக்­கும் மாண்ட குடும்­பத்­திற்கும் இடை­யி­லான தொடர்பு குறித்து அதி­கா­ரி­கள் எது­வும் தெரி­விக்­க­வில்லை.

மயக்­கம் தெளிந்த பின் விசா­ரணை நடத்த அதி­கா­ரி­கள் முய­லும்­போதெல்­லாம் அந்த ஆட­வர் மூர்க்­கத்­த­ன­மாக நடந்­து­கொள்­

வ­தா­க­வும் அவர் 2015ஆம் ஆண்டு­ மு­தல் பரோ­லில் வெளி­யில் இருந்துவருவதாகவும் வார்ன்கே கூறி­னார். மேலும், இவ­ரு­டன் மேலும் ஒருவர் இந்­தச் சம்­ப­வத்­தில் சம்­பந்­தப்பட்­டி­ருக்­க­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

மாண்ட நால்­வ­ரும் இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநி­லம் ஹோசி­யார்­பூ­ரில் உள்ள ஹர்சி பிண்டி பகு­தி­யைப் பூர்­வீ­க­மா­கக் கொண்­ட­வர்­கள் என ஊட­கங்­கள் கூறின.

தற்கொலைக்கு முயன்ற ஆடவரிடம் விசாரணை; மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கலாம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!