போதைப்பொருளை ஒழிக்க தாய்லாந்து சூளுரை

போதைப்பொருளை ஒழிக்க தாய்லாந்து சூளுரை

2 mins read
23960ec6-53dd-424a-bc10-398fb35a2b9b
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் அதி­க­மான குழந்­தை­கள் உட்­பட 38 பேரைக் கொன்ற ஆட­வர் போதைப்­பொ­ருள் உட்­கொண்­ட­தாக காவல்­து­றை­யி­னர் சந்­தே­கிக்­கின்­ற­னர்.

பான்யா காம்­ராப், 34, என்­னும் அந்த ஆட­வர் நா வாங் என்­னும் காவல்­நி­லை­யத்­தில் காவ­ல­ராக இருந்­த­வர். போதைப்­பொ­ருள் தொடர்­பான கார­ணங்­க­ளுக்­காக கடந்த ஆண்டு வேலை­யி­லி­ருந்து அவர் விடு­விக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், உதாய் சவான் மாவட்­டத்­தில் உள்ள பாலர் பள்­ளிக்­குள் நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் துப்­பாக்­கி­யு­ட­னும் கத்­தி­யு­ட­னும் நுழைந்த அவர் அங்கு கண்­மூ­டித்­த­ன­மாக தாக்­கு­தல் நடத்­தி­னார். தமது குடும்­பத்­தி­ன­ரை­யும் கொன்ற அவர் பின்­னர் தம்­மைத் தாமே மாய்த்­துக்­கொண்­டார்.

தாக்­கு­த­லில் மாண்­டோர் எண்­ணிக்கை நேற்­றுக் காலை 38க்கு அதி­க­ரித்­தது. இவர்­களில் 24 பேர் குழந்­தை­கள். கொலை­யா­ளி­யின் குழந்­தை­யும் இறந்­து­விட்­டது.

கொலை­யாளி போதைப்­

பொ­ருள் உட்­கொண்­டி­ருந்­த­தோடு மன உளைச்­ச­லில் இருந்­தது விசா­ர­ணை­யில் தெரி­ய­வ­ரும் என்று காவல்­துறை எதிர்­பார்ப்­ப­தாக தேசிய காவல்­து­றைத் தலை­வர் டேம்­ரோங்­சாக் கிட்­டி­பி­ர­பாட் கூறி­னார்.

மேலும், இது­போன்ற படு­பா­த­கச் செயல்­க­ளுக்கு மூல­கா­ர­ண­மாக விளங்­கும் போதைப்­பொ­ருள்­களை ஒழித்­துக்­கட்­டு­வ­தற்­கான முயற்­சி­களில் தமது படை ஈடு­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"இந்­தச் சம்­ப­வம் மூலம் காவல்­துறை பாடம் கற்­றுக்­கொண்டு உள்­ளது. இது­போன்ற சம்­ப­வம் இனி நடந்­தால் அதனை எப்­படி முறி­ய­டிப்­பது என்­ப­தோடு போதைப்­பித்­துப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் இந்­தத் துறை கற்­று­ணர்ந்து உள்­ளது," என்­றார் அவர்.

இதற்­கி­டையே, படு­கொ­லைச் சம்­ப­வம் நிகழ்ந்த பள்­ளி­யின் படிக்­கட்­டு­களில் ஒற்றை வெள்ளை ரோஜாவை வைத்து பெற்­றோர்­களும் பொது­மக்­களும் நேற்று அஞ்­சலி செலுத்­தி­னர்.

சில தாய்மார்கள் துக்­கம் தாளா­மல் தங்களது குழந்தையின் உடைமைகளை வைத்து அழு­துகொண்டு இருந்தனர்.