அரிய இளஞ்சிவப்பு வைரம் 83 மில்லியன் வெள்ளிக்கு விற்பனை

அரிய இளஞ்சிவப்பு வைரம் 83 மில்லியன் வெள்ளிக்கு விற்பனை

1 mins read
bff34060-c653-4756-98c6-99100eb99d3c
-
Google News Preferred Icon

அரியதோர் இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலவிற்பனையில் கிட்டத்தட்ட 58 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (83 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) விலை போயுள்ளது.

வைரக்கல் அல்லது ரத்தினக்கல்லுக்கு தலா ஒரு காரட் எனும் அடிப்படையில் கொடுக்கப்பட்ட உச்சவிலை இது.

ஹாங்காங்கில் சோதபிஸ் நிறுவனம் வைரத்தை ஏலத்துக்கு விட்டது.

வில்லியம்சன் பிங்க் ஸ்டார் எனும் இளஞ்சிவப்பு வைரம் 11.15 காரட் அளவிலானது.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத ஒருவர், வைரத்தை 57.7 மில்லியன் டாலருக்கு அதை ஏலத்துக்கு எடுத்தார்.

வைரம் 21 மில்லியன் டாலருக்கு விற்கப்படலாம் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.

எந்த ஏலத்திலும் எந்த ரத்தினக் கல்லுக்கும் கொடுக்கப்பட்ட இரண்டாவது ஆக அதிகமான விலை இதுவாகும்.

வில்லியம்சன் பிங்க் ஸ்டார், ஏலத்தில் விற்பனைக்கு விடப்பட்ட இரண்டாவது பெரிய இளஞ்சிவப்பு வைரக்கல் ஆகும்.

வைரத்திலேயே மிகவும் அரிதான இளஞ்சிவப்பு வைரக் கற்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகின்றன.