நியூசிலாந்தின் சேத்தம் தீவில் கரைக்குத் தள்ளப்பட்ட சுமார் 250 'பைலட் வேல்' வகை திமிங்கிலங்கள் மாண்டுவிட்டன. சேத்தம் தீவின் வடமேற்குப் பகுதியில் கரைக்குத் தள்ளப்பட்டதாக நியூசிலாந்தின் இயற்கை, மரபுடைபைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது. இப்பகுதியில் சுறாமீன்கள் அபாயம் அதிகம் இருப்பதால் இவை மீண்டும் கடலுக்குள் அனுப்பப்படவில்லை. அதனால் உயிருடன் இருந்த சில திமிங்கிலங்களை நிபுணர்கள் கருணை கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
படம்: ஏஎஃப்பி