வாகை சூடிய வெர்ஸ்டப்பன்
சுசுகா: எஃப்1
பந்தய மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் மீண்டும் கைப்பற்றி உள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் வெற்றியாளர் கிண்ணத்தை ஏந்தி
யிருப்பது குறிப்
பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற ஜப்பான் எஃப்1 பந்தயத்தில் வெர்ஸ்டப்பன்
இந்தச் சாதனையைப் படைத்தார்.
மழை காரணமாக நேற்றைய பந்தயம் தாமதமடைந்தது. அதுமட்டுமல்லாது, பந்தய நேரமும் குறைக்கப்பட்டது.
ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லர் இரண்டாவது இடத்தையும் ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
மாபெரும் வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் செல்ல வெர்ஸ்டப்பன் குவித்த புள்ளிகள் போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் பந்தயத்தின்போது லெக்லர்க்கின் வாகனம் தடத்தைவிட்டு சற்று விலகியதற்காக அவருக்கு ஐந்து வினாடி தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால் லெக்லர்க் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இதன்மூலம் வெர்ஸ்டப்பனின் வெற்றி உறுதியானது.
இது ஒருபுறம் இருக்க பந்தயத்தின்போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று பிரான்சைச் சேர்ந்த எஃப்1 ஓட்டுநரான பியேர் காஸ்லியைப் கோபப்படுத்தியது. பந்தயத் தடத்தில் டிராக்டர் வாகனம் ஒன்றை அவர் கடந்து சென்றதே இதற்குக் காரணம். முதல் சுற்றில் கார்லோஸ் சேன்சின் பந்தய கார்
விபத்துக்குள்ளானதால் அதை மீட்க அந்த டிராக்டர் பந்தயத் தடத்துக்குள் அனுப்பப்பட்டது. தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று காஸ்லி அதிருப்திக் குரல் எழுப்பினார். 2014ஆம் ஆண்டில் அதே சுசுகா பந்தயத்தடத்தில் மற்றோர் எஃப்1 பந்தய ஓட்டுநரான ஜூல்ஸ் பியான்சிக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

