ஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டம்; குறைந்தது 19 சிறுவர்கள் பலி

ஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டம்; குறைந்தது 19 சிறுவர்கள் பலி

1 mins read
11552b5c-5679-4a95-9f1c-2f34899e8636
-

தெஹ்­ரான்: தலை­யங்கி அணி­யாத கார­ணத்­துக்­கா­கத் தடுத்து வைக்­கப்­பட்டு பிறகு உயி­ரி­ழந்த மாஹ்சா அமினி எனும் 22 வயது இளம் பெண்­ணுக்கு நியா­யம் கேட்டு ஈரா­னில் ஆர்ப்­பாட்­டங்­கள் தொடர்­கின்­றன. இந்­நி­லை­யில், ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இதுவரை குறைந்தது 185 பேர் மாண்டுவிட்டதாகவும் அவர்களில் குறைந்தது 19 சிறுவர்கள் அடங்குவர் என்றும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் பாது­காப்பு அதி­கா­ரி­கள் இரு­வர் மாண்­ட­தாக

ஈரா­னிய ஊட­கம் தெரி­வித்­தது.

அவர்­களில் ஒரு­வ­ருக்­குத் தலை­யில் மிகக் கடு­மை­யான காயம் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆயு­தம் ஏந்­திய ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அவ­ரைத் தாக்­கி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது. இது­வரை குறைந்­தது 14 பாது­காப்பு அதி­கா­ரிகள் மாண்­டு­விட்­ட­னர்.