இந்தியாவிடமிருந்து 6 மில்லியனுக்கும் அதிகமான கொசு வலைகளை வாங்க பாகிஸ்தானின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மலேரியா போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் திணறி வருகிறது.
குளோபல் ஃபண்ட் நிதியம் வழங்கியுள்ள வளங்களைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் பாகிஸ்தானுக்கு கொசு வலைகளை வாங்கித் தருவதாக Geo.tv எனும் தளம் கூறியது.
பாகிஸ்தானுக்கு கொசு வலைகளை விரைவில் வாங்கித் தர தாங்கள் திட்டமிட்டு வருவதாக உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். வாகா எல்லை வழியாக அடுத்த மாதத்திற்குள் கொசு வலைகள் பாகிஸ்தானுக்கு வந்துசேரும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.