உக்ரேன் நிலவரம்: சீனா வருத்தம்

உக்ரேன் நிலவரம்: சீனா வருத்தம்

2 mins read
e73adf83-d439-4204-a3ce-4134693dc6e6
லிவிவ் நகரில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல். படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்­ஜிங்: உக்­ரே­னில் மோச­ம்­ அடைந்து­வ­ரும் நில­வ­ரம் குறித்து தான் கவ­லைக்கு உள்­ளா­கி­யி­ருப்­பதாக சீனா தெரி­வித்­துள்­ளது.

ரஷ்­யா­வை­யும் அத­னு­டன் சேர்க்­கப்­பட்ட கிரை­மியா பகு­தி­யை­யும் இணைக்­கும் கெர்ச் ஸ்ட்­ரெய்ட்ஸ் பாலத்தைக் கடந்த வார இறு­தி­யில் உக்­ரேன் தாக்­கி­யது. அதற்­குப் பதி­ல­டி­யாக ரஷ்யா உக்­ரே­னில் பொது­மக்­கள் இருக்­கும் பகுதி­களின்மீது ஏவு­க­ணைத் தாக்­கு­தலை மேற்கொண்டது.

உக்­ரே­னில் உரு­வெ­டுத்­துள்ள இந்­தச் சூழல் சீனா­வுக்­குக் கவலை தரு­வ­தாக சீன வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் மாவ் நிங் பெய்­ஜிங்­கில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

"பதற்­றத்­தைத் தணிப்­ப­தில் தொடர்ந்து ஆக்­க­க­ர­மான முறை­யில் பங்­காற்ற பெய்­ஜிங் அனைத்­து­ல­கச் சமூ­கத்­து­டன் இணைந்து செயல்படத் தயா­ராய் இருக்­கிறது," என்­றும் திரு­வாட்டி மாவ் நிங் கூறி­னார். அவர் மேல்­வி­வ­ரங்­களை வெளியிடவில்லை.

இதற்­கி­டையே, மேற்­கத்­திய நாடு­க­ளு­டன் மாஸ்கோ பேச்­சு­வார்த்தை நடத்­தத் தயா­ராய் இருப்­பதாக ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர் செர்கே லாவ்ரோவ் கூறி­யுள்­ளார். ஆனால், பேச்­சு­வார்த்தை நடத்த திட்­ட­வட்­ட­மாக யாரும் முன்­வ­ர­வில்லை என்று அவர் சொன்­னார்.

பேச்­சு­வார்த்­தைக்கு அமெ­ரிக்கா தயா­ராய் உள்ளதாகவும் ரஷ்­யா­தான் அதற்கு மறுப்பு தெரி­விப்­பதா­க­வும் சொல்­லப்­ப­டு­வது பொய் என்று ரஷ்ய அர­சாங்­கத்­தின் ஒளி­வழி­யு­டன் நடந்த நேர்­கா­ண­லில் திரு லாவ்­ரோவ் கூறி­யி­ருந்­தார்.

உக்­ரேன் நில­வ­ரம் தொடர்­பில் ஜி7 கூட்­ட­மைப்பு நாடு­கள் மெய்­நி­க­ர் முறையில் சந்­திப்பு நடத்­தின. ரஷ்ய ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து உக்­ரேன் தன்­னைத் தற்­காத்­துக்­கொள்ள ஜி7 நாடு­க­ளி­டம் ஆகா­யத் தற்­காப்பு ஆயு­தங்­களை வழங்­கு­மாறு உக்­ரே­னிய அதி­பர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக்­கொள்­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மேற்­கத்­திய நாடு­கள் உக்­ரே­னுக்கு மேலும் உத­வி­னால் தகுந்த பதி­லடி தரப்­படும் என்று ரஷ்யா முன்­ன­தாக எச்­ச­ரித்­தி­ருந்­தது,

ரஷ்ய ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 19 பேர் மாண்­ட­னர். உக்­ரே­னின் எரி­சக்தி, ராணு­வக் கட்­ட­மைப்­பு­கள் மீதும் ரஷ்யா நேற்று தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தா­க­த் தெரி­விக்­கப்­பட்டது.