மலேசிய பங்கு விலை, ரிங்கிட் மதிப்பு குறைவு

மலேசிய பங்கு விலை, ரிங்கிட் மதிப்பு குறைவு

1 mins read
2ae7ec43-80fc-48f0-b7d0-aa9138a7b806
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் நாடாளு­மன்­றம் கலைக்­கப்­ப­டு­வதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்­நாட்­டின் பங்கு விலை­களும் ரிங்­கிட் மதிப்­பும் குறைந்­தன.

நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்­கப்­போ­வ­தாக மலே­சியப் பிர­த­மர் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தி­ருந்­தார். அதை­ய­டுத்து அந்­நாட்­டின் 15வது பொதுத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­லை­யில் 'கேஎல்­சிஐ' எனும் கோலா­லம்­பூர் பங்­குச் சந்­தை­யில் பங்கு விலை 1.6 விழுக்­காடு வரை குறைந்­தது. அதே­போல் அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான மலே­சிய ரிங்­கிட்­டின் மதிப்பு 0.5 விழுக்­காடு குறைந்­தது.

மலே­சி­ய­ாவில் அர­சி­யல் நிலைத்­தன்மை ஏற்­பட்­டால் அடுத்த பொதுத் தேர்­தல் வர்த்­த­கச் சந்­தை­யில் சாத­க­மா­கப் பார்க்­கப்­படும் என்று 'சிஜி­எஸ்-சிஐ­எம்பி' அமைப்­பின் மலே­சிய ஆய்­வுப் பிரி­வுக்­கான தலை­வர் ஐவி இங் குறிப்பு ஒன்­றில் கூறி­னார்.

அதே வேளை­யில், தேர்­த­லில் தொங்கு நாடா­ளு­மன்­றம் உருவாகி அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டத்தைச் செயல்­ப­டுத்­த­முடியாத சூழல் உரு­வா­கும் சாத்­தி­யம் உள்­ளது.

இதனால் 'கேஎல்­சிஐ' பங்­குச் சந்­தை­யில் பலர் பங்கு­களை விற்­கும் நிலை ஏற்­ப­ட­லாம்.

தேர்­தல் தொடர்­பில் நில­வும் தெளி­வற்ற சூழல், உல­க­ள­வில் பொரு­ளி­யல் சுருங்­கு­வது ஆகிய அம்­சங்­க­ளைக் கருத்­தில்­கொண்டு பங்­குச் சந்­தை­யைப் பொறுத்­த­வரை கவ­ன­மாக நடந்­து­கொள்­ளு­மாறு திரு­வாட்டி இங் முத­லீட்­டா­ளர்­களுக்கு அறி­வுரை வழங்­கி­னார்.

மலே­சிய பொதுத் தேர்­தல் தொடர்­பி­லான தெளி­வற்ற சூழ­லால் ரிங்­கிட் சற்று வலு­வி­ழக்­கக்­கூ­டும் என்று சிங்­கப்­பூ­ரில் உள்ள 'ஸ்கோட்­டி­யா­பேங்க்' வங்­கி­யின் அந்­நி­யச் செலா­வணி உத்தி அதி­கா­ரி­யான திரு சீ காவ் எச்­ச­ரித்­தார்.