தாய்லாந்து பாலர் பள்ளித் தாக்குதல்: மாண்டோரின் உடல்கள் ஒட்டுமொத்தமாக எரிப்பு

தாய்லாந்து பாலர் பள்ளித் தாக்குதல்: மாண்டோரின் உடல்கள் ஒட்டுமொத்தமாக எரிப்பு

1 mins read
f794161e-ffc1-420a-936f-c94ed927aa6c
-

நா கிலாங்: தாய்­லாந்­தின் பாலர் பள்ளி ஒன்­றில் நிகழ்த்­தப்­பட்­ட தாக்­கு­த­லில் மாண்­டோ­ரின் உடல்­களை எரிக்க அவர்­க­ளின் குடும்­பத்­தாரும் அன்­புக்­கு­ரி­ய­வர்­களும் நேற்று திரண்­ட­னர்.

வட­கி­ழக்கு தாய்­லாந்­தில் இருக்­கும் நா கிலாங் மாநி­லத்­தில் நிகழ்ந்த அந்­தத் துய­ரச் சம்­ப­வத்­தில் 24 சிறு­வர்­கள் உட்­பட 36 பேர் மாண்­ட­னர். கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தொடங்­கிய மூன்று நாள் இறு­திச் சடங்­கு­கள் நேற்று நிறை­வ­டைந்­தன.

பொது­வாக மாண்­டோ­ரின் உடல்­களைத் தனித்­த­னி­யாக எரிப்­பது­தான் வழக்­கம். ஆனால் அதி­க­மா­னோர் உயி­ரி­ழந்­த­தால் நா கிலாங்­கில் உள்ள சில பெளத்த ஆல­யங்­களில் உடல்­கள் ஒட்­டு­மொத்­த­மாக எரிக்­கப்­பட்­டன.

தாய்லாந்து மன்னர் மாளிகை அமைப்பின் செலவில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.