இந்தோனீசிய விளையாட்டரங்கில் அக்டோபர் 1ஆம் தேதி நடந்த விபரீதத்தைத் தொடர்ந்து மாலாங் நகரின் காவல்துறையினர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுகொண்டுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் தரையில் மண்டியிடும் புகைப்படத்தை மாலாங் காவல்துறை பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. சம்பவத்தில் மாண்டவர்கள், காயமடைந்தவர்கள் அவர்களது உறவினர்கள் அனைவரிடமு; காவல்துறையினர் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக படத்துடன் பதிவிடப்பட்டது.
கிழக்கு ஜாவா மாநிலத்தில் நடந்த காற்பந்து ஆட்டத்தில் தோல்வியடைந்த அணியின் ஆதரவாளர்கள் திடலுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களைக் கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தியதோடு கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தினர். சில காவல்துறை அதிகாரிகள் மக்களை உதைத்ததாகவும் தள்ளியதாகவும் கூறப்பட்டது.
இச்சம்பவத்தில் குறைந்தது 131 பேர் மாண்டனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதன் தொடர்பில் ஆறு பேர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாக அறியப்படுகிறது.

