டெஹ்ரான்: ஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 28 சிறுவர்கள் மாண்டுவிட்டனர். ஈரானில் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருப்பவையும் இதைத் தெரிவித்துள்ளன.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது குர்தியப் பெண்ணான மாஹ்சா அமினி மாண்டதைத் தொடர்ந்து ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. 'ஹிஜாப்' எனும் தலையங்கியை அவர் சரியாக அணியாததால் அந்நாட்டின் நன்னடத்தைக் காவல்துறையினர் அவரைக் கைதுசெய்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் குறைந்தது 108 பேர் மாண்டுவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.