காஜாங்: அடுத்த மலேசியப் பொதுத் தேர்தலுக்காகப் பிராசரம் செ முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டார் என்று அந்நாட்டின் சிறைச்சாலைப் பிரிவு தெரிவித்துள்ளது. திரு நஜிப் சிறைத் தண்டனையை நிறைவேற்றும்போது அவரும் சிறைச்சாலை சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் உட்படுத்தப்படுவார் என்று செய்தியாளர் கூட்டத்தில் சிறைச்சாலைப் பிரிவின் தலைமை இயக்குநர் நோர்டின் முகம்மது குறிப்பிட்டதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.
69 வயது திரு நஜிப் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று 1எம்டிபி விவகாரத்தில் தமக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார்.

