ஜகார்த்தாவில் மோசமான சிறுநீரகப் பிரச்சினையால் 20 சிறுவர்கள் மரணம்

ஜகார்த்தாவில் மோசமான சிறுநீரகப் பிரச்சினையால் 20 சிறுவர்கள் மரணம்

1 mins read
258a95b1-ed87-404d-8c14-3fd3d5747cd2
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யத் தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் இவ்­வாண்டு இது­வரை மோச­மான சிறு­நீ­ர­கப் பிரச்­சி­னைக்கு ஆளான 20க்கும் அதி­க­மான சிறு­வர்­கள் மாண்­டு­விட்­ட­னர். சிறு­நீ­ர­கப் பிரச்­சி­னைக்­கான கார­ணத்தை அறிய இந்­தோ­னீ­சியா விசா­ரணை நடத்­த­வுள்­ள­தாக சுகா­தார அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­தி­யா­வின் 'மெய்­டன்' மருந்து நிறு­வ­னத்­தின் நான்கு மருந்து வகை­களை உட்­கொண்­ட­தால் கேம்­பி­யா­வில் சுமார் 70 சிறு­வர்­கள் இப்­பி­ரச்­சினைக்கு ஆளாகி மாண்­ட­தாக வந்­த தக­வ­லைத் தொடர்ந்து இந்­தோ­னீ­சி­யா­வில் இந்­நிலை உரு­வாகி­யுள்­ளது.

எனி­னும், கேம்­பியா விவ­கா­ரத்­துக்­கும் இந்தப் பிரச்சினைக்கும் தொடர்­பில்லை என்று இந்­தோ­னீ­சியா கூறி­யுள்­ளது. போதைக் கலப்பினால் மோச­மான சிறு­நீ­ர­கப் பிரச்­சினை உருவாகியிருக்கலாம் என்று முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­த­தாக இந்­தோ­னீ­சிய சுகா­தார அமைச்சு கூறி­யது.