சிட்னி: மோசமான பருவநிலைக்குத் தயாராகுமாறு வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இந்த இரண்டு நாள்களில் சேதம் விளைவிக்கக்கூடிய பலத்த காற்று வீசும் என்றும் கடும் மழை பொழியும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலம்தான் ஆக மோசமாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

