ஜப்பானில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோஸ் கேளிக்கை பூங்காவில் எலும்புகளும் மண்டை ஓடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மனிதர் உடையது என சந்தேகிக்கப்படுகிறது.
ஒசாக்காவில் உள்ள கேளிக்கை பூங்காவில் உள்ள செடிகளை வெட்டிகொண்டிருந்தபோது ஊழியர் ஒருவர் அவற்றை கண்டுபிடித்தார். சம்பவத்தை விசாரிக்க காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். மேல் தாடை பகுதி, மண்டை ஓடு, சில எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மாண்டவரின் வயது, பால் போன்ற விவரங்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர். இச்சம்பவம் விபத்தாகவும் குற்றச்செயலாகவும் விசாரிக்கப்படுகிறது.


