விசா கிடைப்பதில் தாமதம்; இந்தியாவுக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிடும் பிரிட்டிஷ் பயணிகள்

விசா கிடைப்பதில் தாமதம்; இந்தியாவுக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிடும் பிரிட்டிஷ் பயணிகள்

1 mins read
e00fd423-786e-4e59-91e2-f418ad672ee8
-

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த பிரிட்டிஷ் பயணிகள் பலர் பயணத்தைத் தள்ளிவைக்கும் அல்லது ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரரின் சார்பில் தங்களால் இனி சுற்றுப்பயண விசாவுக்கு விண்ணப்பிக்க இயலாது என்று கூறும் நோட்டீஸ்கள் விசா முகவைகளுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் இனி விசா மையங்களில் நேரடியாக முன்னிலையாக வேண்டும். அண்மை மாதங்களாக பிரிட்டனில் இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த பிரிட்டிஷ் பயணிகளுக்கு சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

"உங்களிடம் விசா வந்துசேரும் வரை விமானப் பயணச்சீட்டுகளை வாங்க வேண்டாம் என்பதே எனது அறிவுரை," என்றார்.