கியவ்வில் தொடரும் குண்டு மழை

கியவ்வில் தொடரும் குண்டு மழை

1 mins read
05695f9b-f110-468b-8394-31138e148be7
-

கியவ்: உக்­ரேன் தலை­ந­கர் கியவ்­வைக் குறி­வைத்து ரஷ்யா தொடர்ந்து நேற்று தாக்­கு­தல்­களை நடத்­தி­யது.

கியவ்­வு­டன் சேர்த்து 40க்கும் அதி­க­மான நக­ரங்­களை ரஷ்ய ஏவு­க­ணை­கள் பதம் பார்த்­த­தாக உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில், ஐரோப்­பிய நாடு­க­ளின் வான்­வ­ழித் தற்­காப்பை வலுப்­ப­டுத்­து­வது குறித்து நேட்டோ கூட்­டணி நாடு­கள் பெல்­ஜி­யத் தலை­ந­கர் பிர­சல்­சில் கூடி கலந்­து­ரை­யா­டின.

அத்­து­டன் ரஷ்­யா­வுக்கு எதி­ரான போரில் உக்­ரே­னுக்கு உத­வும் வகை­யில் கூடு­தல் ராணுவ உத­வியை வழங்க அவை முடி­வெ­டுத்­தன.

இதை­ய­டுத்து, உக்­ரே­னுக்கு உத­வி­னால் ரஷ்­யா­வு­டன் நேர­டி­யாக மோது­வ­தாக எடுத்­துக்­கொள்­ளப்­படும் என்று ரஷ்யா எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

உக்­ரேனை நேட்­டோ­வில் இணைத்­துக்­கொண்­டால் மூன்­றா­வது உல­கப் போருக்கு அது கார­ண­மா­கி­வி­டும் என்­றும் ரஷ்யா கூறி­யது. தனது பாது­காப்­புக்கு எவ்­வித பாதிப்­பும் ஏற்­ப­டா­தி­ருக்­கவே உக்­ரே­னுக்கு எதி­ரா­கப் படை­யெ­டுத்­துள்­ள­தாக அது தெரி­வித்­தது. இதற்­கி­டையே, நட்பு நாடான உக்­ரே­னின் ஒவ்­வொரு நிலப்­ப­கு­தி­யும் தற்­காக்­கப்­படும் என்று

அமெ­ரிக்கா அண்­மை­யில்

சூளு­ரைத்­தது.

உக்­ரே­னைத் தற்­போது தன்­னு­டன் சேர்த்­துக்­கொண்­டால் நிலைமை மோச­மாகி அமெ­ரிக்­கா­வுக்­கும் ரஷ்­யா­வுக்­கும் இடையே மோதலை ஏற்­ப­டுத்­தி­வி­டும் என்று கரு­தும் நேட்டோ, உக்­ரே­னின் விண்­ணப்­பம் குறித்து முடி­வெ­டுப்­பதை ஒத்­தி­வைத்­துள்­ளது.