பிரிட்டிஷ் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து குவாசி குவார்டெங் நீக்கப்பட்டுள்ளதாக பிபிசி நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் "இனி நிதி அமைச்சர் இல்லை" என்று அது குறிப்பிட்டது.
பிரிட்டிஷ் நிதி அமைச்சராக மிகக் குறுகியகாலம் பதவி வகித்தோர் பட்டியலில் திரு குவார்டெங் இரண்டாவது நிலையில் இருப்பதாக பிபிசி கூறியது.
1970ல் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்ற முப்பதே நாள்களில் மாரடைப்பு ஏற்பட்டு திரு ஐயன் மெக்லாய்ட் மரணமடைந்தார். அவரே பிரிட்டனில் மிகக் குறுகியகாலம் பதவி வகித்த நிதி அமைச்சராவார்.
2019லிருந்து இதுவரை பிரிட்டனில் நிதி அமைச்சர்களாக நால்வர் இருந்துள்ளனர்.

