இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா நகரைச் சேர்ந்த மாணவரை ஆஸ்திரேலியாவில் ஒருவர் 11 முறை கத்தியால் குத்தியிருக்கிறார். இதில் மோசமாக காயமுற்ற அந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக என்டிடிவி நிறுவனம் அதன் செய்தியில் குறிப்பிட்டது. அவருக்கு வயிற்றில் 11 மணிநேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இது ஓர் இன ரீதியான தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சிட்னி நகரின் லேன் கோவ் பகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. குத்தப்பட்ட ஷுபம் கார்க் எனும் ஆடவருக்குத் தன்னைத் தாக்கியவரைத் தெரியாது. தாக்கியவர் ஓர் 27 வயது ஆடவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஷுபம் கார்கின் குடும்பத்தார் உதவி நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐஐடி மெட்ராசில் பட்டம் பெற்ற பிறகு, முனைவர் பட்டம் மேற்கொள்வதற்காக செப்டம்பர் 1ஆம் தேதி ஷுபம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்.